
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் பத்தாண்டுக்கு மேலாக ஓடாமல் இருந்த ராமேஸ்வரம் தங்கத் திரு தேரை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் பக்தர்களுடைய நேத்தி கடனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. சமயபுரத்தில் பத்தாண்டுகள் மேல் ஓடாமல் இருந்த தங்கத் திருத்தேர் இந்த ஆட்சி ஏற்பட்ட பின் நேர்த்திக்கடனுக்கு பக்தர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் நம்முடைய திருத்தணியிலே ஓடாமல்… ஐந்தாண்டுகளுக்கு மேலாகப் பழுதாகி இருந்த தங்க திருத்தேர் பக்தர்களுடைய நேர்த்தி கடனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. வடபழனி திருக்கோயிலில் தங்க தேர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த தங்கத்தேர் அதுவும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேல்மலையனூரில் அண்மையில் தான் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த திருத்தேர் தற்போது ஓடப்பட்டிருக்கிறது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் 400 ஆண்டுகளுக்குப் பிறகு திருவட்டாறு ஆதிகேச பெருமாள் திருக்கோயிலுக்கு திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி வந்த பிறகு தான் சித்தலாசேரியில் உள்ள திருக்கோவிலின் திருத்தேர் 150 ஆண்டுகளுக்கு பிறகு தான் தற்போது தான் ஓடப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் ஒரு திருக்கோயில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் தெப்பத் திருவிழாவே நடந்துள்ளது. அண்மையிலே செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கின்ற குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்காரம் நடைபெற்றுள்ளது.
பல ஆண்டு நிலுவையில் இருந்த திருக்கோயில்களுக்கு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் குடமுழுக்கு, திருத்தேர் திரு பவனி…. அதே போல் திருவிழாக்கள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான்…. திராவிட மாடல் ஆட்சியில் தான் இப்படிப்பட்ட திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.