மிதுனம் ராசி அன்பர்களே..!
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். இன்று உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும். தனவரவு காலதாமதத்துடனே வந்துசேரும். பயணத் திட்டங்களில சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலர் உங்களை தூண்டும்படி பேசுவார்கள் அவர்களிடம் ஒதுங்கியே இருங்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்யத்தில் கவனம் தேவை.

பதவிகள் வந்துசேரும். தொழிலிலுள்ள பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். விடாமுயற்சியுடன் உழைப்பை மேற்கொள்ளுங்கள். நல்ல பலனைப் பெறுவதற்கு இறைவழிபாடு என்பது முக்கியம். கெட்ட சகவாசத்தை விட்டுவிடுங்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிற்கு திருப்தியளிக்கும். குடும்ப பெரியவர்களை அனுசரித்து நடக்கவேண்டும். இன்று காதலில் உள்ளவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் சிவப்பு நிறம்.