டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஐபிஎல் மோதலில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆவேசத்தின் உச்சத்திற்கே சென்றார். போட்டியின் இக்கட்டான நிலையில், குஜராத் கேப்டன் சுப்மன் கில் ரன்-அவுட் செய்ய வீசிய த்ரோ, ஸ்டம்பில் பட்டும் விக்கெட் கிடைக்காமல் ஓவர்-த்ரோவாக மாறியது.

 

இதனால் டெல்லி அணிக்கு அதிர்ஷ்டவசமாக ரன்கள் கிடைக்க, டக்-அவுட்டில் இருந்த நெஹ்ரா கடும் அதிருப்தி அடைந்தார். அப்போது அவர் இந்தியில் மிக மோசமான ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்தது அப்படியே நேரலையில் கேமராவில் சிக்கியது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், “நெஹ்ரா ஜி இவ்வளவு கோவப்படக்கூடாது” என ஒருபுறம் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தாலும், போட்டியின் தீவிரத்தை இது காட்டுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.