பொதுவாகப் பெண்கள் பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கு ஆளாவதும், அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாகும். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, பெண் ஒருவர் பல்வேறு கடைகளுக்குச் சென்று அங்குள்ள ஆண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வெளியாகியுள்ள அந்த வீடியோ காட்சிகளில், சம்பந்தப்பட்ட பெண் வர்த்தக வளாகங்கள் , துணிக்கடைகள் மற்றும் ஆண்களுக்கான சலூன் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வரிசையாகச் செல்கிறார். அங்குப் பணியில் இருக்கும் ஆண்களைத் தேடிச் சென்று, அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவதும், தவறான முறையில் நடந்துகொள்வதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடையும் கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்கள், அப்பெண்ணை விட்டு விலகிச் செல்ல முயலும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.
இந்தத் தொடர் அத்துமீறல்கள் குறித்து அந்தப் பெண்ணிடம் கேட்கப்பட்டபோது, “என்னுடைய சொந்தச் செலவுகளுக்குப் பணம் தேவைப்படுகிறது; அதற்காகவே நான் இவ்வாறு செய்கிறேன்” என்று அவர் சாதாரணமாகக் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத்திற்காக ஆண்களிடம் இதுபோன்று வெளிப்படையாகப் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதை அப்பெண் நியாயப்படுத்துவது போல் பேசியிருப்பது, வீடியோவைப் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
தற்போது இணையதளங்களில் தீயாகப் பரவி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் நடக்கிறது என்பதற்குச் சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதால், கடைகளுக்குச் சென்று ஆண்களுக்கு அத்துமீறித் தொல்லை கொடுத்த அந்தப் பெண் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
