துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர்,   அரவிந்த் கெஜ்ரவால் நேர்மை இப்போது தான் கேள்விக்குறி என்று இவருக்கு இப்பதான் தெரியும்.  லஞ்சம் ஊழலை எதிர்த்து,  எல்லா கட்சிகளும் லஞ்சம் –  ஊழல் செய்யும் கட்சி. என் கட்சி மட்டும் தான் தூய கட்சி என்று சொல்லி அவர் ஒரு கட்சி அமைத்தார். அதற்கு முன்னால் எனக்கும்,  அவருக்கும் ஒரு வாக்குவாதம்  நடந்தது. அதாவது பெரியவர் அண்ணா ஹசாரே போராட்டம் நடக்குது.  CC சங்கர் ரவி கூறி என்னை

அரவிந்த் கெஜ்ரிவால் வந்து பார்த்தார். அதற்கு காரணம் என்னவென்றால்,  2011இல் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. இது எப்படி 2016 தேர்தல் வரைக்கும் இந்த போராட்டத்தை எப்படி தொடர்வது ? எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், இவர்  அரசியல் இல்லாத….  எதிர்க்கட்சி அரசியலில் ஈடுபடாத…. கட்சி அமைக்காத….. இவருக்கு ஏன் தேர்தல் பற்றி ஒரு நோக்கம் வந்தது. அப்போ வந்து நான் கேட்டேன் அரவிந்த் கெஜ்ரிவாலிடம், நீங்க  என்னதான் பண்ண போகிறீர்கள்? என்றேன்… அதற்க்கு அவர்,  நான் எந்த கட்சியுடன் சேரப்போவதில்லை.  எல்லா கட்சியும் ஊழல் கட்சி. அதனால் நான் தனி போராட்டம் அமைக்க போகின்றேன் என்றார்.

சரி ஆட்சி அமைக்க போகிறீர்களா ?  என கேட்டேன். அதற்க்கு அவர், இல்லை…. இல்லை நான் அரசியல் பக்கமே போக மாட்டேன் என்றார். நான் சொன்னேன்… சார்,  நீங்கள் அரசியல் பக்கம் போக மாட்டீர்கள்….. எல்லா கட்சியையும் வீழ்த்துவீர்கள் என்றால்  புரட்சி பண்ண போகிறீர்களா ? என்று கேட்டேன்….  அவர் உடனே சொன்னார்,  என்ன சார் பண்ணலாம் ? மூணு வருடம் இதை தள்ள வேண்டும் என்று சொன்னார்…. உடனே நான் சொன்னேன்….

நீங்கள் எதிர்க்கட்சிகளை வைத்து தான் ஆளும் கட்சியை வீழ்த்த முடியும். அந்த எதிர்க்கட்சி பதவிக்காக தவறு  செய்துருந்தால், மற்ற எதிர்க்கட்சிகளை வைத்து தான் நீங்கள் ஆளும்  கட்சியை வீழ்த்த முடியுமே தவிர, ஜனநாயகத்தில் இரண்டு பக்கமும் கட்சி இருக்கப் போகிறது. நீங்கள் எல்லாரையும் வெறுத்து ஒரு அரசியல் செய்ய முடியாது. அது தேசிய அரசியலாக இருந்தாலும் கூட என்று  சொன்னேன்… ஐடியா கேட்ட கெஜ்ரிவால்… அப்போது, நான் என்ன  செய்வது என்று கேட்டார் ? நான் சொன்னேன்….

அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் பொழுது நீங்கள் மற்ற காங்கிரஸ் எதிர்ப்பு கட்சி தலைவர்கள் எல்லாம் அழைத்து,  அவர்களுக்கு மாலை போட்டு….  அவர்களோடு மேடையில் ஐந்து நிமிடம்,  10 நிமிடம் உட்கார வைத்தீர்கள் என்றால்,  எதிர்க்கட்சிகள் எல்லாம் அண்ணா ஹசாரே தலைமையில் அன்றைக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில்….  1977இல் ஒன்றாக வந்த மாதிரி  வர முடியும் என்று சொன்னேன். இல்லை சார் அவர்கள் எல்லாம் எதிரில் வேண்டுமானால் உட்காரட்டும், அண்ணா ஹசாரே   பக்கத்தில் உட்கார கூடாது என்று சொன்னார் என பேசினார்.