அனைத்து வங்கிகளிலும் பண பரிவர்த்தனைகள் தற்போது ஆன்லைன் மூலமாக நடந்து வருவது அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு வங்கிகளும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்வதை ஊக்கப்படுத்துவதற்கு பல ஆஃபர்கள் மற்றும் கேஷ் பேக்குகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் ஐடிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டில் புதிய மாற்றம் கொண்டு வருவதாக கூறியுள்ளது. ஐ டி எப் சி வங்கியின் சூப்பர் பிரிமியம் கிரெடிட் கார்டுகளை தவிர மற்ற கார்டுகளில் மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது.
கிரெடிட் கார்டுகள் மூலம் 20000 ரூபாய் வரை பயன்படுத்துவர்களுக்கு ஏற்கனவே ரிவார்ட் புள்ளிகள் ஆறு மடங்காக இருந்த நிலையில் தற்போது அடுத்து மூன்று மடங்காக ரிவார்ட் புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. 20000 ரூபாய் வரம்புக்கு கீழ் உள்ள கிரெடிட் கார்டு தொகைக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படாது. இந்த வரம்புக்கு மேல் ஒரு சதவீத கிரெடிட் கார்டு கட்டண வசதி மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இவ்வாறு ஐடிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.