ஒடிசாவில் பத்ரக் பகுதிக்கு அருகே பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில் பாதுகாப்பாக பூரி நகரை சென்றடையும் வகையில் பாதுகாப்பு வழங்கினர்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து சம்பவத்தில் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. அதோடு ரயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக அந்த பெட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன. இதனை செய்த மர்ம நபர்கள் யார் என்று உடனடியாக கண்டறியவில்லை. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.