கோவா பாம்போலியம் பகுதியில் உள்ள டாக்டர் ஷியாமளா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நேற்று ஒரு சாதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சுற்றுலா அமைப்பு, ஒரு கட்டுமான அமைப்பு என்று மூன்று அமைப்புகள் இணைந்து, தொழிலாளர்கள் உதவி இல்லாமல் உடனடியாக வீடு கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக பலகைகள், கண்ணாடி கதவுகள் போன்றவை கொண்டு 130 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது.

இந்த வீட்டை கட்ட மொத்தம் 10:30 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டனர். இதனை 21 பேர் கொண்ட குழு செய்தது. இதன் மூலம் நேரத்தையும், பணத்தையும் மிச்சப் படுத்த முடியும். அதோடு இந்த வீடு அதிகமான மக்களை கவரும் என்று, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழு தெரிவித்துள்ளது.