“பாஜகவிலிருந்து அதிரடியாக விலகி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்த அண்ணாமலை, தனது புதிய இயக்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வை குறித்து வெளியிட்டுள்ள அடுத்தடுத்து அதிரடித் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது.
‘ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று நான் முடிவு செய்த போது, முதலில் இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஐயாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன்’ என அண்ணாமலை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது லட்சியத்தை உடைத்த அவர், உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களின் உயர்பதவிகளில் தமிழர்கள் கொடிகட்டிப் பறப்பதாகவும், அவர்கள் அனைவரும் நம்முடைய புதிய இயக்கத்தில் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.
‘வளர்ந்த பாரதம்’ (Developed India) என்ற இலக்கை நோக்கி நாடு பயணிக்கும் வேளையில், அதில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்நிறுத்தப் போவதாக முழங்கியுள்ள அண்ணாமலை, தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ‘கல்ட்’ (Cult politics) தனிநபர் வழிபாட்டு அரசியலில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளிவந்து, எளிய மக்களுக்கான ‘காமன் மேன் பாலிடிக்ஸ்’ (Common Man Politics) என்ற சாமானிய அரசியலைக் கொண்டு வருவதே தனது முதன்மை நோக்கம் என அதிரடியாகப் பிரகடனம் செய்துள்ளார்.”
