“தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான திருமண விழாக்களில் அட்சதை என்ற பெயரில் அரிசி வீணாக்கப்படுவதற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருமண மேடை ஒன்றிலேயே மிகக் காரசாரமாகவும், சிந்திக்க வைக்கும் விதமாகவும் பேசியுள்ள பேச்சு தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
‘தமிழ்நாட்டில் நடக்கும் நூற்றுக்கு 99 சதவீத திருமணங்களில் அரிசியை மணமக்கள் மீது வீசி வாழ்த்து தெரிவிக்கிறார்கள்; ஒரு கல்யாணத்திற்கு வெறும் 2 கிலோ அரிசியைப் பயன்படுத்தினால் கூட, ஒரு லட்சம் திருமணங்களில் சுமார் 2 லட்சம் கிலோ அரிசி அநியாயமாக வீணாகிறது’ என அதிரடி புள்ளிவிவரத்தோடு தன் ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
மேலும், அப்படி வீசப்படும் அரிசிகூட ஒழுங்காக மணமக்கள் மீது விழுவதில்லை, அது பக்கத்தில் நிற்பவர்களின் தலையில்தான் விழுகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், ‘ஆகவே, தயவுசெய்து இனி உங்கள் வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளுக்கு அட்சதை போட்டு அரிசியை வீணாக்காதீர்கள்; அதற்குப் பதிலாக உதிரிப்பூக்களைப் பயன்படுத்தி வாழ்த்துங்கள்’ எனப் பொதுமக்களுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
கம்யூனிஸ்ட் தலைவரின் இந்த ‘நோ ரைஸ் வேஸ்டேஜ்’ (No Rice Waste) அட்வைஸ் சோஷியல் மீடியாவில் காரசார நல்லா விவாதப் பொருளாக மாறியுள்ளது.”
