தமிழக அரசியல் களத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி குறித்து பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தாங்கள் அந்தப் புதிய கூட்டணியில் இல்லை என்று CPI மூத்த தலைவர் முத்தரசன் அதிரடியாக விளக்கியுள்ளார். மேலும், தாங்கள் தற்போதும் திமுக கூட்டணியில்தான் நீடிப்பதாக அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

​தமிழகத்திற்குள் பாஜக எந்தக் காரணத்தைக் கொண்டும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு CPI ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், மற்றபடி பிரவீன் சக்கரவர்த்தியின் சமூக ஊடகப் பதிவிற்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.