“பாஜகவிலிருந்து அதிரடியாக விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்த அண்ணாமலையின் அடுத்தடுத்த மூவ்கள், தமிழக அரசியல் களத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் வேளையில், தற்பொழுது ஒரு மெகா சாதனைத் தகவல் வெளியாகி ஒட்டுமொத்த கோட்டை வட்டாரத்தையும் கதிகலங்க வைத்துள்ளது.

புதிய இயக்கம் மற்றும் அடுத்த தேர்தலில் போட்டி என்ற அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, அண்ணாமலை பொதுமக்கள் முன்னிலையில் நேரலையில் (Live) தோன்றி உரையாடி வரும் நிலையில், அவரது புதிய இயக்கத்தில் இணைவதற்காக wetheleader.org என்ற இணையதளம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

என்ன ஒரு ஆச்சரியம் என்றால், தளம் தொடங்கப்பட்ட வெறும் 30 நிமிடங்களிலேயே சுமார் 50 ஆயிரம் பேர் மின்னல் வேகத்தில் உறுப்பினர்களாக இணைந்து அண்ணாமலைக்குத் தங்களின் மெகா ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போதும் விநாடிக்கு விநாடி லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தளத்தை முற்றுகையிட்டு வருவதால் உறுப்பினர் சேர்க்கை எக்கச்சக்கமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அண்ணாமலை வெளியிட்ட அந்த ஒற்றை வீடியோவும், இந்த 30 நிமிட மெகா சாதனை இணையப் பதிவும் தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு தற்போதே ஒரு பெரிய நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.”