தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. இந்த முறை மிக முக்கிய மாற்றமாக, சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் பொதுமக்களுக்காக முழுமையாக நேரலை செய்யப்பட உள்ளது என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இனி அவையில் நடக்கும் ஒவ்வொரு விவாதமும், மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளும் நேரடியாக உங்கள் மொபைல் மற்றும் டிவி திரைகளில் தெள்ளத் தெளிவாகக் காண முடியும். மேலும், இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
