நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் காளியம்மாள், ஒரு கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு விவசாய பெண்மணி, நான் காலையில சித்தாள் வேலைக்கோ,  கொத்தனார் வேலைக்கோ அல்லது கல்லு தூக்கவோ, இல்ல மண்ணு தூக்கவோ  காலையில ஏழு மணிக்கு பேருந்த  பிடிச்சு, வேலையெல்லாம் செஞ்சு முடிச்சிட்டு இரவு எட்டு மணிக்கு தான் வீட்டுக்கு வந்து சேருவேன். 100 நாள் வேலை திட்டம் என்று ஒரு திட்டம் வச்சிருக்கீங்க இல்ல.

அதுல போடுகின்ற பணத்தை கூட எனக்கு வங்கியில போயி ஒரு செலான் பில்லப் பண்ணி எடுக்க தெரியல. அதுக்கும்  100 ரூபாய் லஞ்சம் கொடுத்து வீட்டுக்கு வந்து யாரிடமாவது ஏடிஎம் கார்டை எடுத்து கொடுக்க கூடிய மக்களுக்கு நீங்க ஆன்லைன்ல போய் பதிவு,  அதை விண்ணப்பிக்கணும். அப்படின்னு சொல்லி இருக்காங்க.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில ஒரு கோடி பெண்களுக்கு மட்டும் தான் குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு . மத்த அம்புட்டு பேரும் தெருவுல நிக்கணும். இப்படித்தான் திட்டம் வரையறுக்கப்படுது. ஒரு பக்கம் செந்தில் பாலாஜி. குறிப்பாக… பத்து ரூபாய் பாலாஜி என்று செல்லம்மா அழைக்கப்பட்டார்… அந்த பத்து ரூபாய் பாலாஜியுடைய ஊழல் அப்படியே மூடி மறைச்சிட்டாங்க . காரணம் என்ன? இந்த ஆயிரம் ரூபாய் உதவி தொகை. இதுதான் இந்த பக்கம் பல்ல காட்டி இழிகுதுனா…. எடப்பாடி சித்தப்பா… அவரு வேற லெவல்..

200 கோடி ஒதுக்கீடு பண்ற ஒரு துறையில,  ஒரு திட்டத்துல. ஒரு ஒப்பந்தத்தில் ,1800 கோடி ஒதுக்கி இருக்காரு. எப்படி பார்த்தாலும்… கூட்டி கழிச்சு பார்த்தாலும் கணக்கு சரியா வரல. இப்படி பல்வேறு கட்சிகளால் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தை லஞ்சம் பெறுபவர்களுக்கும்,  ஊழல்வாதிகளுக்கும் கொடுத்துவிட்டு நல்ல அரசாங்கம் அமையல என தெரிவித்தார்.