நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் காளியம்மாள், தமிழக அரசு 1000 ரூபாய் பணத்தை சும்மா கொடுக்கல.. மரியாதைக்குரிய ஸ்டாலின் ஐயா அவர்கள்,  உங்கள் வீட்டினுடைய அண்ணன் மூத்தவர். அவர் தன் தங்கை வீட்டுக்கு வந்துவிட்டு திரும்ப போகும்போது…  வெறுங்கையோட போயிடக்கூடாது. ஒரு ஆயிரம் ரூபாயை கையில் வைத்து,  இதை வைத்து வீட்டு செலவு பார்த்துக்க.

ஒரு 10 கிலோ தக்காளியை வாங்கு  இல்லன்னா….  ஒரு எட்டு கிலோ தக்காளியை வாங்கி சாம்பார் வைத்து குடி. பச்சை மிளகாய்  160 ரூபாய் விக்குது, இஞ்சி 300 விக்குது , பூண்டு 350 விக்குது மொத்தமா ஒரு நாளைக்கு மட்டும் சாப்பிடு. அப்படின்னு கையில குடுத்துட்டு கணவனுடைய வருமானத்தை நீ எதிர்பார்க்கவே கூடாது  என்பதற்காக கொடுக்கிறார். இதனுடைய நுட்பத்தை நாம புரிஞ்சுக்கணும்..

கணவனுடைய வருமானத்தை எதிர்பார்க்கப்பிடாது. ஏன் ? அது தமிழ்நாட்டுக்கு வருவாய் ஆக வேணும் … ஒரு குவாட்டர்,  ஒரு கோழி பிரியாணியும்,  ஏதோ சைடு டிஷ் – கப்பு எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு நம்ம ஆளுங்க 400 ரூபா அரசாங்கத்துக்கு குடுக்குறாங்க.. 30 நாள்.. 30 *400  எவ்வளவு,  12000 ரூபாய்..12000 ரூபாயை நம்மிடம் இருந்து புடிங்கிட்டு,  மாசம் 1000  ரூபாய்  உங்களுக்கு. 

11 ஆயிரம் ரூபாய் கம்பெனிக்கு இலாபம். இதுக்கு பேரு உரிமை தொகை. நல்ல வேலை,  நானும் அதுல வந்து சேர்ந்துருவேன் போல இருக்கு. நம்மட்ட சொந்தமாக காரும் இல்லை, உருப்படியா ஒரு வீடு இல்ல, அதனால நம்பலும் அதுல இப்போம் போல இருக்குது… இதுல நீங்கள் அனைவரும் போயி ஆன்லைன்ல விண்ணப்பிக்கணும். ஓட்டையும் அதுலையே போட சொல்லிடா அதுலயே போட்டு விட்டுடுவோம்ல என தெரிவித்தார்.