பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று முதல் முறையாக இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்திருக்கிறார். இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன்படி இந்தியா மற்றும் இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இலங்கையின் காங்கேசன்துறை  வரை இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த சொகுசு கப்பல் ஒவ்வொரு வாரமும் இயக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு  தற்போது சுற்றுலா பயணிகள் உடைய வருகையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கப்பல் போக்குவரத்து மேம்படுத்தும் விதமாக இது சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியில் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நாகை இலங்கை காங்கேயம் துறை வரை பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.