இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் லைக், கமெண்ட் செய்து பணம் சம்பாதிக்கலாம் என நூதன முறை மோசடி சமீப காலமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், டெலிகிராம் மூலம் இந்தவகை மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பல் மீது சென்னையை சேர்ந்த தீபிகா என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், ‘வேலை பார்த்ததற்கு ரூ.1,300 சம்பளம் கொடுத்தார்கள். பின் வேலையை தொடர பணம் கட்ட சொன்னார்கள். சில நாட்களுக்குப் பின் சம்பாரித்த பணத்தை எடுக்க பணம் கேட்டார்கள்’ என கூறியுள்ளார்.