நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் காளியம்மாள், இந்த சமூக நீதி.. திமுகவின் சமூக நீதியை எங்கேயாவது சந்து பொந்துல தான் போய் தேடணும். ஒரு ஜமாத்தார்கள் சந்திக்க வராங்க. ஒரு அமைச்சர் அவர் இருக்கையில் உட்கார்ந்துவிட்டு அத்தனை பேரையும் நிக்க வச்சு பேசிக் கொண்டிருக்கிறார். அதுல வருத்தப்பட்டு… நாம் தமிழர் கட்சி,  எங்க அண்ணன் உட்பட அனைவரும் வருத்தப்பட்டு பேசறோம்.

அதில் நின்னுட்டு இருந்தவங்களே வந்து பதில் சொல்றாங்க….  நாங்களாதாங்க நின்னோம், அவர் உட்காரத்தான் சொன்னாரு,  நாங்களா தான் நின்னோம்..  ஒரு அமைச்சரை காப்பாற்ற நினைக்கிற நீங்கள்,  நமக்கான மாண்பை காப்பாற்ற வேண்டும் என்று ஏன் நினைக்கல? ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய மான்பல்லவா அது. இப்படித்தான் இவர்களுடைய சமூக நீதி கட்டமைக்கப்பட்டிருக்கு.

இந்த கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கக்கூடிய பழங்குடி இன மக்கள்ல….  பழங்குடியின மக்களை   பக்கத்து மாநிலத்தில் இருக்கிற காவல்துறை கொண்டு போயி,  அவங்களை விசாரணை செய்ற என்ற பெயரில்…  விடுதலைன்னு ஒரு படம் பார்த்தோம் இல்லையா.. அந்த படத்துல ஒரு காவல்துறை அதிகாரி பெண்களை எவ்வளவு கொடூரமாக நடத்துவாங்க,  நீங்க பார்த்திருப்பீங்க.. 

அந்த பெண்களை நிர்வாணப்படுத்தி – அடிச்சு – கைகளை உயர்த்த சொல்லி – பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தடவுனத்துல பாத்தோம் ,அழுதோம்,கண்ணீர் விட்டோம். இப்போ நம்ம கண் முன்னாடியே நடந்து கொண்டு இருக்குது.  ஆனா எல்லாரும் மவுனிச்சி இருக்கோம். ஏன் ? யாரோ ஒருவருக்கு நடந்துருச்சு.. கேட்க நாதியற்ற கூட்டத்திற்கு நடந்துருச்சு..

பேசுவதற்கு யாருமே இல்லாதவர்களுக்கு நடந்திருச்சு.. என்று தமிழக அரசும் சரி, மற்ற கட்சிகளும் சரி கடந்து போகலாம்… அதை கேட்பதற்கு என்று ஒரு கட்சி,  ஒரு தலைவன்,  எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் …. நாங்கள் அத்தனை பேரும் இருக்கிறோம்.. இன்றைக்கும் அந்த மக்களை போய் சந்தித்து, 

உங்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க  உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று வாக்குறுதி கொடுத்துட்டு வந்திருக்கிறோம், எங்களின் அண்ணனோட அறிவுறுத்தலின் படி…. எல்லா நிலைகளுக்கும் மலைகளை காப்பாற்ற நாம் தமிழர் கட்சி தான் வந்து போராடுகிறது, மரங்களை காப்பாற்ற நாங்கள்  தான் போராடுகிறோம், நதிகளை காப்பாற்ற, ஆறுகளை காப்பாற்ற, மணலை காப்பாற்ற, கடலை காப்பாற்ற, நம் உரிமைகளை காப்பாற்றும்  வரைக்கும் நாம் தமிழர் கட்சி தான் களத்துல நிக்குது. ஆனா நாம் வாக்கு செலுத்த தயங்குறோம் என தெரிவித்தார்.