”கொடநாடு கொலை” வழக்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது காவல்துறை செய்ய வேண்டிய வேலை அது. சட்டப்படி அவர்களை தீர விசாரித்து,  யாரெல்லாம் இதுல சம்மந்தப்பட்டு இருக்கிறார்களோ…  அதை கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறை. அதை செய்ய வேண்டியது தமிழக அரசு, அதை தான் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

யார் குற்றாவளி என  அதான் விசாரணையில் தெரியும். தீவிர விசாரணையில்..  விரிவான விசாரணையில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை  நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியது, கடமை அரசுக்கு இருக்கிறது. அப்போது இருந்த அரசில் துணை முதலமைச்சருக்கு அரசில் எந்தவித அதிகாரமும் இல்லை.

நான் வகித்த துறையில் மட்டும் தான் அதிகாரம் இருந்ததே ஒழிய,  சட்ட ஒழுங்கில், காவல்துறை இதுக்கு எல்லாம் எனக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.  அதனை முழுமையாக நடைமுறைப்படுத்திய பொறுப்பு,  யாரெல்லாம் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருக்கிறார்களோ,  அவர்களுக்குத்தான் உண்டு. தீவிர புலன் விசாரணை செய்து,  யார் உண்மை குற்றவாளிகளோ  அவர்களை கண்டுபிடித்து,  நாட்டுக்கு சட்டத்திற்கு முன் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய பொறுப்பும் – கடமையும் அரசுக்கு இருக்கிறது என தெரிவித்தார்.