மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் (Sehore) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஒரு அதிரடிச் சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
சஞ்சு சிங் என்ற நபர், தனது முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி ஏடிஎம் (ADM) நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
இதனை கண்டு பிடித்த அவரது முதல் மனைவி, தனது பிள்ளைகளுடன் நீதிமன்ற வளாகத்திற்கே நேரடியாகச் சென்று கையும் களவுமாகப் பிடித்தார்.
First Wife Catches Man Applying For Second Marriage At Sehore Collectorate, Thrashes Him Publicly#MadhyaPradesh #FreePressMP #MPNews pic.twitter.com/JEwoaGSVfL
— Free Press Madhya Pradesh (@FreePressMP) December 24, 2025
தனது குடும்பத்தை ஏமாற்றிவிட்டு மறுமணம் செய்யத் துணிந்த கணவரைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த மனைவி மற்றும் பிள்ளைகள், அங்கேயே சண்டையிடத் தொடங்கினர்.
வாக்குவாதமாகத் தொடங்கிய இந்த மோதல், ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. தந்தை என்றும் பாராமல் பிள்ளைகளும், மனைவியும் சேர்ந்து சஞ்சு சிங்கை பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாகத் தாக்கினர்.
இதில் சஞ்சு சிங் திருமணம் செய்ய இருந்த பெண்ணுக்கும் அடி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சினிமா பாணி மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வரும் நிலையில், இது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
