“பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு” என்பார்கள், ஆனால் இங்கு ஒரு சித்தி கல்லுக்கும் மேலாகக் கொடூரமாக நடந்து கொண்டுள்ளார். கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது 5 வயது மாற்றாந்தாய் மகள் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக ஆத்திரமடைந்துள்ளார்.

ஆத்திரம் தலைக்கேறிய அந்தப் பெண், அடுப்பில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு கரண்டியால் (Spatula) அந்தச் சிறுமியின் பிறப்புறுப்பில் சுடு வைத்துள்ளார்.

இந்தக் கொடுமை கடந்த வாரம் நடந்த நிலையில், அங்கன்வாடிக்குச் சென்ற அந்தச் சிறுமி வகுப்பில் அமர முடியாமல் தவிப்பதைக் கண்ட ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

சிறுமியைப் பரிசோதித்தபோது காயங்கள் இருப்பதை அறிந்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். விசாரணையில், சிறுமியின் தந்தை நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

தற்போது அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்து 14 நாள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நலக் குழுவின் (CWC) பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.