செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,   இப்போ சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன ? நிஜமாகவே ரேப்  பண்ணுவதா ? சினிமாவில் கொலை செய்கிறார்கள்… இப்போ எல்லாமே ஹீரோவே  செய்து விடுகின்றார்கள். விக்ரம் படத்துல கமல் சார் பண்ணாரு….  அன்னைக்கே சொன்னேன்…. அதெல்லாம் இருட்டடிப்பு பண்ணிட்டு…. சூர்யா பண்ணினாரு….. ஆஹ்  நல்லா கொலை பண்ணுகிறார்…. நிஜமாகவா கொலை பண்ணுகிறார்கள் ?

சினிமாவில் ரேப் சீன் என்றால் நெஜமாவே ரேப் பண்ணுகிறார்களா ?  முட்டாள்…. அறிவு கெட்ட கூமுட்டைகளா ? உங்களுக்கு அறிவு வேண்டாம்.  சங்கத்திற்கு அறிவு வேண்டாம்….. கேட்க வேண்டாம்…. யோக்கிய சிகாமணிகளா அங்கே உக்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க.

குறைந்தபட்ச அறிவு வேண்டாமா ? சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன ? எப்படி எழுப்பார்கள்… அப்படி  தூக்கி கட்டில் போடுகிறேன்… அய்யோ அடிபட்டுருச்சு…. அசிஸ்டன்ட்டை கூப்பிடு….. உடனே துணி விலகுகிறது.. துணியை போர்த்துட்டு… அம்மா மன்னிச்சிக்கோங்க…

கை ஏதும் பட்டு இருந்தா  தப்பை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்லுவேன்.. அவுங்க இடுப்புல அடி பட்டு இருக்கான்னு பாரு… இப்படித்தான் நடக்கும்…. சினிமாவில் ரேப் சீன் நிஜமாகவே நடக்குமா ?  உங்கள் யோசனைக்குவிட்டுறுதேன். எனக்கு தமிழ்நாடு என் பக்கம் இருக்கிறது. இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படுபவன் நான் இல்ல என தெரிவித்தார்.