உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவ கூடிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த அடிப்படையில் இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வரக்கூடிய நிலையில்,  தற்போது 10 மணி வரை பல்வேறு மாவட்டங்களிலும் மழை  நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அந்த வகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,

அதே போல ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல புதுவை மற்றும் காரைக்காலிலும் 10 மணி வரை மழை நீடிக்கும்.  லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையமானது தெரிவித்திருக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.