நாட்டில் மலிவு விலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடை வாயிலாக உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. அதோடு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த வருடத்தில் நாட்டிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க மத்திய அரசானது திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு வீட்டிலும் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருக்க வேண்டும் என மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு 23 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ரேஷன், சர்க்கரை, உப்பு மற்றும் பிற பொருட்களையும் குறைந்த விலைக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது சர்க்கரைக்கு 1 கிலோவுக்கு ரூ. 10 மானியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த மானியத் தொகை ரூ.15 ஆக உயர்த்தப்படலாம். அதோடு 6 மாத காலமாக ரேஷன் பொருட்கள் வாங்கப்படாத கார்டுதாரர்களின் ரேஷன் அட்டை ரத்துசெய்யப்படும் என கூறப்படுகிறது..