இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் இரண்டு பெரியவர்கள் ஒரு கடையின் முன்பு நின்று ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்ற வாலிபர் ஒருவர் தனது கையில் பேப்பர் ஒன்றை வைத்துள்ளார். பின்பு அங்கு வந்த மற்றொரு வாலிபர் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த முதியவரிடம் கீழே ஏதோ கிடைக்கிறது என்று கூறுகிறார்.

 

இதை அடுத்து கீழே குனிந்த பெரியவரின் சட்டைப் பையில் இருந்த செல்போனை மற்றொரு வாலிபர் லாவகமாக திருடிச் சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.