மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சீனா எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு அதிபர் டொனால்ட் டிரம்பைத் திணறடித்துள்ளது.
ஈரானைத் தனிமைப்படுத்த அமெரிக்கா போட்டு வைத்திருந்த அனைத்துத் திட்டங்களையும் சீனா தனது “ராஜதந்திர” நகர்வுகளால் தகர்த்து வருகிறது.
குறிப்பாக, ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு அமெரிக்கா விதித்துள்ள தடைகளை முறியடிக்க, சீனா அந்த நாட்டுடன் மிகப்பெரிய பொருளாதார மற்றும் ராணுவ ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதன் மூலம் ஈரானுக்குத் தேவையான நிதி மற்றும் நவீன ஆயுத உதவிகளைச் சீனா ரகசியமாக வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தவிடுபொடியாக்கும் வகையில், டாலருக்குப் பதிலாகத் தங்களது சொந்த நாட்டுப் பணத்திலேயே வர்த்தகம் செய்ய ஈரான் – சீனா முடிவு செய்துள்ளன. சீனாவின் இந்தத் தடையற்ற ஆதரவு, ஈரானுக்குப் புதிய பலத்தைத் தந்துள்ளதோடு, அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் பதிலடி கொடுக்கவும் துணிவைத் தந்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் சீனாவின் இந்தத் திடீர் என்ட்ரி, அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குப் பெரிய முற்றுப்புள்ளி வைக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதன் பின்னணியில் ஈரானின் “பழிவாங்கும்” படலம் இனி புதிய வேகமெடுக்கும் என்பதால் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
