தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மக்களோடும், கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு,  எவ்வாறு,  நடத்துவது என்பது பற்றியும் விவாதித்தோம் ?

அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவெடுத்து இருக்கின்றோம். மேல்முறையீடு மூலம் சட்டப் போராட்டம் ஒரு பக்கம், மக்களை சந்திக்கின்ற புரட்சி பயணம் இன்னொரு பக்கமும் தொடரும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். மற்றபடி இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பொருத்தவரை நாங்கள் எப்போதும் சொல்லி வந்ததைப் போல,

பழனிச்சாமி அவர்களை நம்ப முடியாது என்பதை மீண்டும் பழனிச்சாமி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அகில இந்தியாவுக்குமே வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே அரசியலில் நம்பகத்தன்மை என்பது ஒரு அடிப்படை பண்பு. அந்த பண்பு தலைவருக்கு இருக்க வேண்டும். சாதாரணமாக கடைக்கு ஒரு பொருளை வாங்க ஒரு பையனை அனுப்ப வேண்டும் என்றாலும் கூட,  நம்ப தகுந்தவனை தான் நாம் அனுப்புவோம்.

அதேபோல தமிழ்நாட்டு மக்கள் சார்பாக ஒரு நாட்டை ஆளுகின்ற உரிமையை யாரிடம் தர வேண்டும் என்றால் ? அந்த  நம்பிக்கைக்குரியவரிடம் தான் தர வேண்டும். அந்த நபிக்கையை… நம்பகத்தன்மையை பெறுவது ஒரு அரசியல்வாதியின் அடிப்படை பண்பாகும். அந்த நம்பிக்கைக்குரியவர் எனது அருமை நண்பர் ஓபிஎஸ் அவர்கள் என  நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே மாதிரி நம்பகத்தன்மை அற்றவர் யார் என்பதை இன்று நாடும் அறியும், உலகமும் அறியும் என தெரிவித்தார்.