செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செல்லூர் ராஜா அண்ணன் சொன்னது போல… மத்தியிலே மோடி அவர்கள்,  மாநிலத்திலே எடப்பாடி என சொல்லுங்கன்னு சொல்றத எப்படி சொல்ல முடியும் ? எப்படி ஒத்துக்க முடியும் ? முடியாது…  அது தேசிய தலைவர்கள் முடிவு பண்றது. அண்ணாமலை நான் மைக்ல சொல்ல முடியுமா ? அது என் வேலை கிடையாது.

என்னை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக தான் நான் இங்க தலைவரா இருக்கேன். சொல்லித்தான் தலைவராக வந்தேன். அப்படி கட்சியை நடத்துகின்ற விதத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். அக்ரசன் இருக்கும். சில இடத்துல விட்டுக்கொடுக்க முடியாது. என்னை மாநில தலைவராக கொண்டு வரும்போது என்ன ரிஸ்க் இருக்குனு பிஜேபிக்கு தெரியும்.

I am not a grass roots seasoned politician. 30 ஆண்டுகள்… 40 ஆண்டுகள்… அரசியலில் அப்படியே வளர்ந்து. அப்படி இருக்கும் போது அந்த பொலிட்டீசியனுக்கு அட்ஜஸ்ட்மென்ட் கேரக்டர். சில இடத்தில் பேச மாட்டாங்க.. சில இடத்துல பேசுவாங்க..  நான் ஒரு ரிபல். I’m a Rebel . நான் ஆக்ரோஷமா தான் அரசியல் பண்ணுவேன்.  எனக்கு தெரியும்.

அது பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கும்,  தொண்டர்களுக்கும் தெரியும். அண்ணாமலை யார்? இந்த கட்சியை ஆழமாக… ஆக்ரோசமா டிபன் பண்றேன். இந்த கட்சி வளர வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரத்துல தெளிவா சொல்றேன். எந்த எந்தக் கட்சிக்கும்,  இந்த கட்சிப் போட்டி இல்ல. இந்த கட்சியை அழிச்சு…. இந்த கட்சியை உருட்டி….  இந்த கட்சியில் இருந்து தான் வரணும்னு அவசியம் இல்லை என தெரிவித்தார்.