செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நீங்க என்னைக்குமே அரசியல்ல 2 + 2 = 3 ஆகவும் போகலாம்.  2 + 2 = 5 ஆகவும் போகலாம். But It Never Will Be 4. அதுதான் அரசியலில் கூட்டணில பாலபாடம். நீங்க சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல மூணு கால் ஓட்டம்னு ஓடி இருப்போம். என்னன்னா….  ரெண்டு பேர் ஒரு ஒரு கால கட்டிண்டு மொத்தம் மூணு காலு கணக்கு,  ஓட்டம்.  அந்த மாதிரி  ஓட்டிட்டு இருந்தது இல்லைனா….  வேகமாக ஓட முடியுமா ?

நான்  Son of Physical Director. அதுனால இது பத்தி நல்லா தெரியும். ஆகவே  பிஜேபிக்கு எந்த  பாதிப்பும் வராது. அது மட்டும் இல்லை. நாளைக்குள்ள தமிழ்நாட்டுல பாரதிய ஜனதா கட்சி….  தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுப்பெற்று என்கின்ற செய்தியை ஊடக நண்பர்கள் எனக்கே போன் பண்ணி சொல்லுவீங்க.

இன்னைக்கு சம்பவத்துக்கு பிறகு… நான் வந்து நேத்து….  முந்தாநாள் எல்லாம் இந்த மாதிரி பேசினேனா…  நீங்க கேட்டீங்க….  அப்ப கூட அதிமுகவின் தலைமையோ இல்லபாரதிய ஜனதா கட்சியின் தலைமையோ கூட்டணி முடிந்தது என்று சொல்லுகின்ற வரை இது பற்றி நான் கருத்து கூற மாட்டேன் என்பதை தெளிவாக சொல்லியிருந்தேன். ஆனால் இன்னைக்கு என்னவோ இவங்கள நாங்க கட்டிப்போட்டு வச்சிருந்த மாதிரி… இவங்க இப்ப திடிர்னு ப்ரீஆயிட்டது மாதிரி, அதை கொண்டாடுற மாதிரி பண்ணுறாங்க. அதான் What a nonsense என கேட்கிறேன்.