பல ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில், தற்போது ஐநா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்திய பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் வெறும் கிரிமினல் குற்றங்கள் மட்டுமல்ல, அவை “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்” (Crimes Against Humanity) என்று ஐநா நிபுணர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ள பல முக்கிய உலகத் தலைவர்கள் மற்றும் பெரும் கோடீஸ்வரர்களின் பெயர்கள், அவர்கள் இந்த விபரீதச் செயல்களில் எப்படித் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை இந்த அறிக்கை விலாவாரியாக விளக்குகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தப்பிக்க விடக்கூடாது என்றும் ஐநா கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இந்த வழக்கை நேரடியாகக் கையில் எடுத்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பணமும் அதிகாரமும் இருந்தால் எதையும் மறைத்துவிடலாம் என்று நினைத்த பல விஐபிக்களுக்கு, ஐநாவின் இந்த அறிக்கை ஒரு மரண அடியாகப் பார்க்கப்படுகிறது.
