சீனாவின் ‘ஜென்-இசட்’ (Gen Z) தலைமுறை இளைஞர்களிடையே ‘ஹண்டர் ஸ்டைல் லவ்வர்’ (Hunter-style lover) என்ற புதிய டேட்டிங் முறை காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. விலையுயர்ந்த பரிசுகளை விட, தன் காதலுக்காக ஒருவர் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதையே இந்த முறை முக்கியமாகக் கருதுகிறது.
அதாவது, ஒரு பரிசின் விலை எவ்வளவு என்பதைப் பார்க்காமல், அதைத் தேடிப் பிடித்து வாங்குவதற்கும் அல்லது உருவாக்குவதற்கும் அவர்கள் எடுத்த ‘வேட்டை’ போன்ற முயற்சியை வைத்துதான் அன்பை மதிப்பிடுகின்றனர்.
எளிமையான ஆனால் உணர்வுபூர்வமான செயல்கள் மூலம் காதலை வெளிப்படுத்தும் இந்த ஸ்டைல், சீன சமூக வலைதளங்களில் இப்போது செம டிரெண்டிங். ஆடம்பரத்தை விட ஆழமான அன்புக்கே முன்னுரிமை என்ற இவர்களின் பாணி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
