செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அன்னைக்கு இருந்த மாவட்ட ஆட்சியர் என்ன பண்ணாரு ? அப்ப அவுங்க எல்லாம் ஏன் இதை கேட்கல ? தடுக்கல ?  முதன்முதலா இவங்க  இதுல வீடு கட்டும்போது…. இது அரசு இடம்,  பொது இடம்… இதை ஆக்கிரமித்து வீடு கட்டாதீங்க….  நீங்க வெளியே போங்கன்னு சொல்லி இருந்தா ? அவுங்க வேற ஒரு இடம்  வாங்கி,  வீடு  கட்டிட்டு போயிருப்பாங்க. அவங்க காசு போட்டு கட்டி…. பல ஆண்டுகள் குடி இருந்த பிறகு இடிச்சு விட்டால்,  எப்படி?

பிள்ளைகளெல்லாம் படிச்சுக்கிட்டு இருக்கின்ற நேரத்துல நீங்க வீட்டை இடிக்கிறீங்கனா… மாநகராட்சி கமிஷனர் , அழகு மீனா, உங்க புள்ளைங்க எல்லாம் படிச்சு என்ன செய்யப் போகிறது என்று கேட்கிறார் என்றால் எவ்வளவு பெரிய அதிகார திமிர். வீடுகளை…  எங்க பொருட்களை எடுத்து வைக்கிறதுக்கு….  தமிழ் அலுவலர்களை விட்டால் எடுக்க மாட்டாங்க என்று அதுலயும் ஹிந்திகாரங்களை கொண்டு வந்து…..  அவனுக்கு நான் யாரு  தெரிய போகுதா என்ன ?

அவனுக்கும்,  எனக்கும் என்ன தொடர்பு இருக்கு. அவங்கள வெச்சு எங்களுடைய பண்ட பாத்திரங்கள்,  பொருட்களை வெளியே தூக்கி  போடுற வேலைகளை அரசு செஞ்சா,  எவ்வளவு கொடுமையானது என்று பாருங்கள். இப்போ தற்காலிகமாக நிறுத்தி வச்சிருக்கீங்க….

அதை நிரந்தர நிறுத்தம் ஆக்கணும்… 40 வீடுகளுக்கு மேல இடிச்சி இருக்கீங்க…  அவங்களுக்கு வீடு கட்டி,  நீங்க கொடுக்க வேண்டாம்… நீங்க வீடு கட்டுன்னா… உங்க வீடு எப்படி இருக்கும் என எங்களுக்கு தெரியும்…  உரிய இழப்பீடு தொகையை கொடுங்க,  என் மக்கள் அவர்களுக்கு பிடித்தது போல வீட்டை கட்டி வாழட்டும் என தெரிவித்தார்.