தமிழகத்தில் பொதுமக்கள் பலரும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில் மக்களுக்கு சிறப்பான பேருந்து சேவையை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு புதிய பேருந்துகளை வாங்குவதற்கு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ள நிலையில் சமீபத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்திடம் இருந்து சுமார் 1750 பேருந்துகளுக்கான ஆர்டரை பெற்றுள்ளதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பாக விரைவில் 1666 புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆயிரம் பழைய பேருந்துகளை சுமார் 152.50 கோடி மதிப்பில் புதுப்பிக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.