தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர் ராசு, அவரது மனைவியுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்துள்ளார். மனுவில், சொத்து ஆவணங்கள் 2 மகன்களின் கையில் இருப்பதாகவும், அதனால் வயதான காலத்தில் அவர்களால் துன்புறுத்தப்படுவதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ராசுவின் சொத்துகள் அனைத்தும் 2 மகன்களால் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மற்ற 2 மகன்களுக்குப் பங்கு கிடைக்கவில்லை என்றும், சொத்து ஆவணங்களை மீட்டுக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மனைவியுடன் சேர்ந்து, இருவரும் தங்களது சொந்த வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மருமகள்கள் தங்கள் வீட்டு சொத்துகளிலும் பிரச்சனை உண்டாக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இருவரும், தங்களது சொத்து ஆவணங்களை மீட்டுத் தரக் கோரி, அத்துடன் 4 மகன்களுக்கும் சொத்துகளை சமமாகப் பிரிக்க உதவுமாறு கலெக்டரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.