ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய  முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  உறுதியாக நமது புரட்சித்தொண்டன் நாளிதழ் நமது தொண்டர்களை கடந்து,  தமிழக மக்களின் இதயங்களில் ஒரு நிரந்தர இடத்தை ”புரட்சித்தொண்டன்” நாளிதழ் இடம் பெறும் என்பது நமக்கு உறுதியாக நம்பிக்கை இருக்கிறது.  நமக்கு இங்கே வந்து வாழ்த்துரை வழங்கிய நமது அண்ணன்மார்கள் ரவீந்திரன் துரைசாமி அவர்களும், துரை கருணா அவர்களும்….  இரண்டு துரைகளும் இங்கே வந்து நமக்கு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள்.

உண்மையிலேயே நாம் பெற்ற பாக்கியம். அவர்கள் தொலைக்காட்சியில் உரையாடுகின்ற பொழுது… வாதங்களில் கலந்து கொண்டு,  எதிர்வாதங்கள் செய்வர்களை…   தங்களுடைய பேச்சாற்றல் மூலம்… அன்பால், அவர்களை ஈர்த்து ,எதிர்கொண்டு…  மேற்கொண்டு கேள்விகனைகளை .. எதிர் தரப்பினர் மேற்கொண்டு கேட்க முடியாத அளவுக்கு தங்களுடைய வாதங்களை எடுத்து வைக்கின்ற போது…  மிக உயர்ந்த இடத்தில்,  உன்னத இடத்தில், இன்றைக்கு அரசியல் களத்தில் நடமாடி  கொண்டு இருக்கின்றார்கள் என்பது நாம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

இன்றைக்கு அவர்கள் வந்து வாழ்த்தியது யாம் பெற்ற பெரும் பெயராகவே நான் கருதுகிறேன் என்பதனை இந்த நல்ல நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.  ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து,  அதை வெற்றிகரமாக உயர்ந்த நிலையில்…. உச்ச நிலையில்  கொண்டு போய் நிலை நிறுத்துவது என்பது… எவ்வளவு கடினமான வேலை,  கடமை,  என்பதை நாங்கள் எல்லாம் நன்றாக அறிவோம். அதிலும் நமது அருமை அண்ணன் மருது அழகுராஜ் அவர்கள்  உடன்  அடிக்கடி உரையாடும் போது…

மாண்புமிகு அம்மா அவர்கள்  அவருக்கு இடுகின்ற கட்டளை பார்க்கின்ற  போது… நேரடியாக அந்த தொடர்பிலே இருந்த காரணத்தினால் எவ்ளளவு சிரமமான வேலை என்பதையும்,  அதிலும் ஜனநாயகத்தில் நான்காம் தூணாக பத்திரிக்கை துறை விளங்கிக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் சருக்கள் இல்லாமல் தொடர் ஓட்டமாக… அந்த ஓட்டம் வெற்றி பயணமாக…. அமைகின்ற வகையில் அவர்கள் பணியாற்றுகின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பு, ஆசிரியருக்கு உண்டு.

எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் அரசியல் நாகரீகத்திலிருந்து ஒரு படி கூட கீழே இறங்காமல், எதிர்க்கட்சிகளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் எப்பொழுதும் மதித்து அவர்கள்…  தங்களுடைய பேச்சாற்றல் மூலம், எழுத்தாற்றல் மூலம், கவர்ந்து இழுத்து, தமிழகத்தினுடைய ஒட்டுமொத்த மக்களுடைய ஆதரவையும்… எதிர் கட்சிகளே பாராட்டும் அளவில் பேரறிஞர்  அண்ணா அவர்கள் நமக்கு நல்ல வழியை காட்டினார்களோ…  அந்த வழியில் ”புரட்சி தொண்டன்”  நாளிதழும்,  மருது அழகுராஜ்  ஆசிரியர் மூலமாக இந்த இதழ் தமிழக மக்களினுடைய அனைத்து இல்லங்களிலும்…. உள்ளங்களிலும்… நிச்சயமாக நிரந்தரமாக இடம் பெரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்பதனை இந்த நேரத்தில் பதிவு செய்ய கடமை பட்டு இருக்கிறேன் என தெரிவித்தார்.