சென்னை மாவட்டத்தில் உலா ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியில் இரவில் தொப்பி அணிந்து ஒருவர் சுற்றி திரிந்தார் அவர் ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை 3 நிமிடத்தில் திருடி சென்றுள்ளார். அவருக்கு ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக் திருடுபோனது பற்றி அதன் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.