அரியலூர் மாவட்டத்தில் உள்ள குருவாடி பகுதியில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். மாவட்ட மருத்துவத்துறையினருக்கு வீரபாண்டியன் மருத்துவ படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவத் துறையினர் நடத்திய ஆய்வில் வீரபாண்டியன் எம்பிபிஎஸ் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வீரபாண்டியை கைது செய்தனர். பின்னர் மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் மெடிக்கல் ஷாப்பை பூட்டி சீல் வைத்தனர்.