ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே செட்டியம்பாளையம் கோவில் திருவிழாவில் பரண் ஆட்டு கிடாய் பூசை நடைபெற்றது. அப்போது நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த பூசாரியான பழனிச்சாமி என்பவர் ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை விடாமல் குடித்துள்ளார். அவருடன் சேர்ந்து மற்ற பூசாரிகளும் ஆட்டு ரத்தத்தை குடித்துள்ளனர். மேலும் ஆட்டு ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்தும் சாப்பிட்டு உள்ளார்.

சிறிது நேரத்தில் பேச்சு மூச்சில்லாமல் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பழனிசாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.