விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனி பகுதியில் லிங்கம் (44)-பழனியம்மாள் (44) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஏற்கனவே பழனியம்மாளுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் இறந்து விட்டதால் லிங்கத்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் பழனியம்மாளுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருந்தும் லிங்கம் அவரை விரும்பி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய மகள் ஆனந்த வள்ளிக்கு (23) திருமணமான நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய மகன் ஆதித்யா 9-ம் வகுப்பு முடித்த நிலையில் பத்தாம் வகுப்பு செல்லை இருந்தார்.

இந்நிலையில் லிங்கம் மற்றும் பழனியம்மாள் இருவருக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதால் பல பேரிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இந்த கடனை அவர்களால் திருப்பி செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அவர்களுடைய வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தில் அவர்களுடைய வீட்டின் கதவை தட்டினர். ஆனால் அவர்கள் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து திருத்தங்கல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது லிங்கம் மற்றும் பழனியம்மாள் இருவரும் ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கினர். அதன் பிறகு மற்றொரு அறையில் ஆனந்தவள்ளி, அவருடைய குழந்தை சஷ்டிகா, ஆதித்யா ஆகியோர் பிணமாக கிடந்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடன் தொல்லை காரணமாக அனைவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.