பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக நேற்று மதியம் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, ஷாருக் மும்பைக்கு விமானத்தில் செல்வார் என்று அவருடைய நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஷாருக்கின் மேலாளர் ஷாருக்கானின் உடல்நிலை முன்பை விட சிறப்பாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.