தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டாரின் சம்மதத்தோடு  திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தனர். அதன் பிறகு 18 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரிந்து விட்டார்கள்.  ஆனால் இருவரும் விவகாரத்து பெறாமல் இருந்தனர், இதனையடுத்து இருவரும் பரஸ்பரம் விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசி உள்ள பிரபல பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப், சொந்த பந்தத்தில் இருந்து ஒரு பெண்ணை பார்த்து தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க கஸ்தூரி ராஜா முடிவெடுத்துள்ளார்.  சினிமா சார்ந்து இருந்தால் சில சமயத்தில் பிரச்சினை ஏற்படும் அதனால் சொந்தத்தில் ஒரு பெண்ணை பார்த்துவிடலாம் என்று அவருடைய குடும்பம் நினைக்கலாம். எனவே சொந்தத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவருடைய அம்மா அப்பா முடிவு செய்துள்ளார்கள் என்று தெரிவித்தார் .ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.