நடிகை ரேகா நாயர் எதையும் துணிந்து பேசக்கூடியவர். சமீபத்தில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல்கள் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் குறித்த சர்ச்சையான பேச்சுகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஏற்கனவே திருமணம் ஆன எம்எல்ஏ ஒருவரை இவர் திருமணம் செய்ததாக தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் இது குறித்து பதில் அளித்துள்ள அவர், ஆமாம் எம்எல்ஏ அப்பா எனக்கு பழக்கமானவர் .ஒன்றாக மாரத்தான் ஓடி இருக்கிறோம். ஒரே ஏரியாவில் இருப்பதால் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே எனக்கு நல்ல நண்பர்கள். எனக்கு பல எம்எல்ஏக்கள் அமைச்சர்களை தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும் வதந்திகளில் வெளியான எம்எல்ஏ உடன் திருமணமா? என்ற கேள்விக்கு, அதற்கான பதிலை எம்எல்ஏவிடமே போய் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.