இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கிழக்கே போகும் ரயில். இந்த திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே மனம் கவர்ந்த பாடல்களாக உள்ளன. இதில் ராதிகாவின் நடிப்பு எவ்வளவு இயல்பாக இருந்ததோ அதுபோல தன்னுடைய நடிப்பை வெளிகாட்டியவர் சுதாகர். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1978ல் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி 1980களில் தமிழ் சினிமா நட்சத்திரமாக வலம் வந்தவர். அதன் பிறகு சில திரைப்படங்கள் தோல்வி அடைந்ததால் சினிமாவை விட்டு அவர் விலகினார். தற்போது 65 வயதாகி உள்ள சுதாகர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இவரது புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் முந்தைய நினைவுகளை பகிர்ந்து வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.