தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை உருவாக்கினார். இந்த படத்தை சுந்தர் சி இயக்கி நடித்திருந்த நிலையில் நடிகைகள் ராசி கண்ணா மற்றும் தமன்னா, கோவை சரளா ஆகியோர்  முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் கடந்த மாதம் வெளியான நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரண்மனை 4 படம் உலகம் முழுதும்  தற்போது 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் இதன்மூலம் 2024 ஆம் ஆண்டில் முதல் 100 கோடி வசூல் சாதனை புரிந்த தமிழ் படம் என்ற பெருமையை அரண்மனை 4 பெற்றுள்ளது.