தினேஷ் கார்த்திக் குறித்து நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “சிறப்பாக சென்று வாருங்கள் நண்பா! நீங்கள் ஒரு மிகச்சிறந்த சாம்பியன். அனைத்து சாத்தியமான வழியிலும் ஒரு மிகச்சிறந்த வீரர்” என்று பதிவிட்டுள்ளார். RR-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வி அடைந்தது. இதனால் ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து RCB அணி வெளியேறியது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின்  தோல்வியை தொடர்ந்து கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல் லில் இருந்து ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்.  இவர் இந்தியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகள், 94 ODI போட்டிகள், 60 டி20 போட்டிகள் என்று மொத்தம் 180 போட்டிகளில் ஆடியுள்ளார்.