ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே ஒரு லீக் ஆட்டத்தில் சந்தித்துள்ள நிலையில் ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது.

இதற்கு ராஜஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று ஹைதராபாத்தும் வெற்றி முனைப்பில் இருப்பதால் இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் இந்த ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.