ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அடுத்த மாதம் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி நியூயார்க்கில் ஜூ ன் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை வெளியாகி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.25,000 முதல் ரூ.8 1/2 லட்சம் வரை விற்கப்படுகிறது.

இதில் குறைந்த விலை டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்பனையான நிலையில், டைமண்ட் கிளப் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தை பார்க்க டிக்கெட் விலையானது ரூ.16 1/2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விலையை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடைபெறுவது போட்டியை பிரபலப்படுத்துவதற்காகவும், ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவும் மட்டும்தான். அதன் மூலம் டிக்கெட் விற்பனை செய்து பணத்தை அள்ளுவதற்காக அல்ல என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.