ஐபிஎல் போட்டியில் இருந்து ஆர்சிபி அணி வெளியேறிய நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 வருடங்களாக ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனிலும் விராட் கோலியின் ஐபிஎல் கோப்பை கனவு கனவாகவே போனது. ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விராட் கோலி நல்ல முறையில் விளையாடினாலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் கோப்பையை வெல்ல முடிவதில்லை. இந்நிலையில் விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ போன்று செய்ய வேண்டும் என கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

அதாவது மெஸ்ஸி மற்றும் ரொனோல்டோ போன்று ஆர்சிபி அணியை விட்டு வெளியேறி வேறு அணிக்கு செல்ல வேண்டும். அப்போது விராட் கோலியால் நிச்சயம் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும். ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மதிப்பை கொண்டு வருகிறார் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் விராட் கோலி கோப்பையை வெல்ல தகுதி உடையவர் என்பதால் கோப்பையைப் பெற உதவும் அணியில் அவரிடம் பெற வேண்டும். விராட் கோலி டெல்லியில் பிறந்தவர் என்பதால் அவர் டெல்லி அணியில் இடம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரம். மேலும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ போன்றவர்கள் தங்கள் அணியை விட்டு வெளியேறி வேறு அணியில் சேர்ந்ததால் வெற்றி பெற்றனர் என்று கூறியுள்ளார்.