இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் டி20 உலக கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா சிறப்பான முறையில் விளையாடுவார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கான தேர்வு முடிந்துவிட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் வீரர்கள் என்ன ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதை தேர்வாளர்கள் பார்த்தனர். அதே சமயம் ஐபிஎல் தொடர் பார்ம் மட்டும் முக்கியம் கிடையாது.

ஏனெனில் அதன் அடிப்படையில் பார்த்தால் ஹர்திக் பாண்டியா சிறப்பான முறையில் விளையாடவில்லை. ஆனால் ஏற்கனவே அவர் இந்தியாவுக்காக விளையாடிய செயல்பாடுகளை பார்க்கும்போது கண்டிப்பாக அவர் அணியில் இடம்பெற வேண்டியவர். அவருடைய பௌலிங் மற்றும் பிட்னஸ் போன்றவைகள் இந்தியாவுக்கு கண்டிப்பாக தேவை. மேலும் ஐபிஎல் தொடரில் சொதப்பினாலும் இந்த உலகக் கோப்பை போட்டியில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ‌