ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்களாக இந்திய அணி கோப்பையை வெல்லாத நிலையில் இந்த வருடம் கண்டிப்பாக டி20 உலக கோப்பையில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா விளையாடும். கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் இந்தியா சந்தித்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில் இந்த வருடமாவது வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வது கடினம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் ரிஸ்க் எடுத்து பேட்டிங் மற்றும் பவுலிங் விளையாட விரும்புவதில்லை. இந்தியா ஒரு கணிக்க கூடிய அணி ஆகும். அவர்களுடைய தரத்தை எதிரணியினர் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். மேலும் இந்திய அணியினர் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பவர்கள் கிடையாது என்று கூறியுள்ளார்.